தமிழகத்தில் காலியாக உள்ள 320 வனக்காப்பாளர் பணிக்கான அறிவிக்கை கடந்த நவம்பர் மாதம் இறுதியில் வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பப்பதிவு ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த நிலையில், வனக்காப்பாளர் பணிக்கான தேர்வு தேதி விவரங்களை சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ளது. அதன்படி, முதனிலைத் தேர்வு மார்ச் 7, 8 தேதிகளில் நடைபெறும். இது கணினிவழி ஆன்லைன் தேர்வு ஆகும்.
வனக்காப்பாளர் பணிக்கான கணினி வழித்தேர்வு மார்ச் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது.