பொருளாதார மந்தநிலை: நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... ஆய்வில் தகவல்

அடுத்த ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என்று பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.


கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முன்னர் 8 சதவீதப் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்த இந்தியா, இந்த ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவீதம் என்ற மிக மோசமான நிலைக்கு வந்துள்ளது. அதற்கு முந்தைய ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5 சதவீத வளர்ச்சியை இந்தியா கொண்டிருந்தது. இவ்வாறு படிப்படியாக ஒவ்வொரு காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.